இ-காமர்ஸ் நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடு : ஆன்லைன் நிறுவனங்களின் அதிரடி சலுகைகள் குறையும்

இ-காமர்ஸ் நிறுவனங்கள் அளிக்கும் தள்ளுபடிகள், சலுகைகளை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு புதிய கொள்கைகளை அறிவித்துள்ளது.
இ-காமர்ஸ் நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடு : ஆன்லைன் நிறுவனங்களின் அதிரடி சலுகைகள் குறையும்
x
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் மட்டும்  விற்கப்படும் பொருட்களால், சில்லறை வர்த்தகர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்கிற புகார்களால் மத்திய தொழில் கொள்கை அமைச்சகம்  இந்த நடவடிக்கையை  மேற்கொண்டுள்ளது. அந்நிய முதலீடுகளைக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள் அனைத்து வர்த்தகர்களுக்கும் பாரபட்சம் இல்லாத வாய்ப்பை அளிக்க வேண்டும் என்று அமைச்சகம் கூறியுள்ளது. இதன்படி, ஒரு விற்பனையாளரிடம் இருந்து 25 சதவீத பொருட்களை மட்டுமே ஆன்லைன் நிறுவனங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும்,  தங்களிடம் மட்டுமே பொருட்களை விற்க வேண்டும் என உற்பத்தியாளரைக் கட்டுப்படுத்தக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கைகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலாக உள்ளது. இதனால் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்களின் அதிரடி சலுகைகள் குறையும் என்று நேரடி சில்லரை வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்