முதல்முறையாக இந்தியாவிலேயே அனைத்து தொலைத் தொடர்பு தேவைகளுக்குமான சிப் செட் தயாரிப்பு

முதல்முறையாக இந்தியாவிலேயே அனைத்து தொலைத் தொடர்பு தேவைகளுக்குமான சிப் செட்டை பெங்களூரு நிறுவனம் தயாரித்துள்ளது.
முதல்முறையாக இந்தியாவிலேயே அனைத்து தொலைத் தொடர்பு தேவைகளுக்குமான சிப் செட் தயாரிப்பு
x
முதல்முறையாக இந்தியாவிலேயே அனைத்து தொலைத் தொடர்பு தேவைகளுக்குமான சிப் செட்டை பெங்களூரு நிறுவனம் தயாரித்துள்ளது. மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா இந்த புதிய சிப் செட்டை அறிமுகப்படுத்தினார். 5 தொழில்நுட்பத்துக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள இந்த சிப் மூலம் செல்போனில் நேரடி தொலைக்காட்சி சேவை பெறலாம் என்றும், போன் இணைப்பு இடையில் துண்டிக்கப்படும் சிக்கலும்  இருக்காது என்றும் அமைச்சர் கூறினார். தற்போது இண்டெல், ஏ எம் டி, சாம்சங், குவால்காம் போன்ற சர்வதேச நிறுவனங்கள்தான் சிப் தயாரிக்கின்றன. முதல்முறையாக இந்திய நிறுவனம் நேரடி டிவி சேவையினையும் அளிக்கும்  சிப் தயாரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்