சாக்லெட்டாலான 7 அடி ஸ்பைடர் மேன் சிலை

புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள பேக்கரியில், முழுவதும் சாக்லெட்டாலான ஸ்பைடர் மேன் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
சாக்லெட்டாலான 7 அடி ஸ்பைடர் மேன் சிலை
x
புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள பேக்கரியில், முழுவதும் சாக்லெட்டாலான ஸ்பைடர் மேன் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. 7 அடியில் உயரம் கொண்ட இந்த சிலை, 362 கிலோ சாக்லெட்டை பயன்படுத்தி, 158 மணி நேரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த சிலையை செய்துள்ளதாக, சிலையை செய்த ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.  பேக்கரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஸ்பைடர் மேன் சிலை முன்பு நின்று உற்சாகமாக செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்