அந்நிய செலாவணியைப் பெறுவதில் இந்தியா முதலிடம் - உலக வங்கி அறிக்கையில் தகவல்

அந்நிய செலாவணியை பெறுவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
அந்நிய செலாவணியைப் பெறுவதில் இந்தியா முதலிடம் - உலக வங்கி அறிக்கையில் தகவல்
x
* வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அந்நிய செலாவணியாக வந்துள்ள தொகை 8 ஆயிரம் கோடி டாலர். இது, இந்திய மதிப்பில் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயாகும். 

* இந்தியாவை தொடர்ந்து, 4 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாயுடன் சீனா இரண்டாவதாகவும், அடுத்த இடங்களில் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாயுடன் மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ் நாடுகளும் உள்ளன. 

* இந்தியாவுக்கு வரும் அந்நியச் செலாவணி தொடர்ந்து அதிகரித்துள்ளது. 2016-ல் 4 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாயாகவும், 2017-ல் 4 லட்சத்து 66 ஆயிரம்  கோடி ரூபாயாகவும்  இருந்தது. 

* 2017- ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள தொகையின் அளவு 2 புள்ளி 7 சதவீதமாகும். 

* வெளிநாடுகளில் இருந்து அதிக அந்நியச் செலாவணியைப் பெற்றதில் தெற்காசிய நாடுகள், 13 புள்ளி 5 சதவீதத்துடன் முன்னிலையில் உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்