"தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரை மேகதாது அணை தடுக்காது" - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்
பதிவு : டிசம்பர் 09, 2018, 01:07 PM
தமிழகத்தின் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் மேகதாதுவிற்கு நேரில் வந்து பார்வையிடவேண்டும் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தின் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் மேகதாதுவிற்கு நேரில் வந்து பார்வையிடவேண்டும் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை மேகதாது அணை தடுக்காது எனவும், சகோதர மாநிலமான தமிழகத்துடன் நாங்கள் சண்டையிட மாட்டோம் எனவும்  தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அனைத்து அனுமதிகளையும் முறையாக பெற்றபின்தான் அணைகட்டும் முயற்சியை தொடங்குவோம் என்று கூறியுள்ள டி.கே.சிவக்குமார், ஏற்கெனவே காவிரி நீர்பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இறுதி தீர்ப்பையும் மீறமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.