உலகின் மிக உயரமான சட்டப்பேரவை கட்டிடம் : அமராவதியில் கட்ட ஆந்திர அரசு திட்டம்

புதியதாக அமைய உள்ள ஆந்திர தலைநகரான அமராவதியில், உலகின் மிக உயரமான தலைமை செயலக கட்டிடத்தை கட்ட அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன், மாதிரி வடிவமைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
உலகின் மிக உயரமான சட்டப்பேரவை கட்டிடம் : அமராவதியில் கட்ட ஆந்திர அரசு திட்டம்
x
* சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையின் உயரத்தை விட அதிகமாக உயரம் கொண்ட கட்டிடத்தை அமராவதியில் கட்ட உள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார்.

* இந்த நிலையில், நார்மன் ஃபாஸ்டர் நிறுவனம் தயார் செய்த தலைமை செயலகம் மற்றும் சட்டப்பேரவை கட்டிடத்தின் இறுதி வடிவமைப்பு மாதிரிகளை  ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார். 

* இதனையடுத்து 250 மீட்டர் உயரம், 200 மீட்டர் அகலம், 200 மீட்டர் நீளம் மற்றும்  12.4 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட மாதிரி சட்டப்பேரவை வடிவமைப்பை ஆந்திர அரசு வெளியிட்டுள்ளது. இதே போல் தலைநகர் அமராவதியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய நீதிமன்றங்கள் கட்டுவதற்கான மாதிரி வடிமைப்பையும் ஆந்திர அரசு வெளியிட்டுள்ளது.  விரைவில் இதற்கான ஒப்பந்தம் அழைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்