ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் வருகை அதிகரிப்பு
பதிவு : டிசம்பர் 04, 2018, 11:15 AM
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பால் எழுந்த கலவரத்தை அடுத்து அமல்படுத்திய 144 தடை உத்தரவு, மண்டல பூஜைக்காக கோவில் நடை கடந்த 16 ஆம் தேதி அன்று திறக்கப்பட்டும் இன்னும் தடை தொடர்கிறது. 
பக்தர்கள் தற்போது நிலக்கல் பகுதியில் வாகனங்களை நிறுத்திவிட்டு, அங்கிருந்து அரசு பேருந்து மூலம் பம்பைக்கு சென்று சபரிமலைக்கு செல்கின்றனர். போலீசார் பக்தர்களுக்கு பல கட்டுபட்டுகள் விதித்துள்ளதால் கடந்த நாட்களில் பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது. இந்நிலையில் நடைதிறக்கப்பட்டு 18 நாட்களான நிலையில் நேற்று மாலை வரை 67 ஆயிரத்திற்கும் அதிகமாக பக்தர்கள் பம்பையை கடந்து சபரிமலைக்கு சென்றுள்ளனர். இது மேலும் அதிகரித்து 90 ஆயிரம் வரையான பக்தர்கள் சபரிமலைக்கு வருவர்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. கூட்டம் அதிகரித்துள்ளதால் பக்தர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க.வினர் யாகம் நடத்தி சிறப்பு பூஜை

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் புதுச்சேரி பாஜகவினர் யாகம் நடத்தி சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர்.

131 views

ஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்

மேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.

11755 views

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

722 views

பிற செய்திகள்

கணவன் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி

நாமக்கல் மாவட்டம் திருச்சேங்கோட்டில் கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி போலீசார் விசாரணையில் கொலை செய்த‌தை ஒப்புகொண்டுள்ளார்.

59 views

காய்ச்சல் பாதிப்பு - துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொருளாளர் துரைமுருகன் காய்ச்சலால் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

62 views

பாரம்பரிய கார், இருசக்கர வாகன அணிவகுப்பு

திருச்சியில் பழமையான பாரம்பரிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது.

47 views

இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததால் போராட்டம்..!

மதுராந்தகம் அடுத்துள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

18 views

மேற்கூரையை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கொள்ளை

மதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் நகரில் பல்பொருள் அங்காடி கடையின் மேற்கூரையை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

38 views

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கும் பிரதமர் மோடி...

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்னைமயுடன் வெற்றி பெற்றது.

62 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.