சபரிமலை விவகாரம் : கேரள சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

சபரிமலை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், கேரள சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
சபரிமலை விவகாரம் : கேரள சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
x
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள், இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். கேரள சட்டப்பேரவையிலும் கடந்த சில நாட்களாக இந்த பிரச்சனை எதிரொலித்தது. இந்த நிலையில், இன்றும் கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபரிமலை விவகாரம் தொடர்பாக கடும் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு கடும் அமளியில் ஈடுபட்டதால், கேரள சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்