ஜி20 மாநாடு : வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் குற்றவாளிகளை பிடிக்க 9 அம்சம் திட்டம் தாக்கல் செய்தார் பிரதமர் நரேந்திரமோடி

அர்ஜெண்டினாவில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி, பொருளாதார குற்றங்களை செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் குற்றவாளிகளை பிடிப்பது தொடர்பாக 9 அம்சம் திட்டம் ஒன்றை தாக்கல் செய்தார்.
ஜி20 மாநாடு : வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் குற்றவாளிகளை பிடிக்க 9 அம்சம் திட்டம் தாக்கல் செய்தார் பிரதமர் நரேந்திரமோடி
x
அர்ஜெண்டினாவில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி, பொருளாதார குற்றங்களை செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் குற்றவாளிகளை பிடிப்பது தொடர்பாக 9 அம்சம் திட்டம் ஒன்றை தாக்கல் செய்தார். 

* அதில், பொருளாதார குற்றவாளிகளை பிடிப்பதற்கு ஜி-20 நாடுகள் வலுவான, செயல்படத்தக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

* பொருளாதார குற்றவாளிகள் மற்ற நாடுகளில் நுழைவதை தடை செய்யவும், அடைக்கலம் தராமல் இருக்கவும் வழிமுறையை உருவாக்க வேண்டும் என மோடி குறிப்பிட்டுள்ளார்.

* பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்கவும், அவர்களை சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு நாடு கடத்தவும் தேவையான சட்ட நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

* பொருளாதார குற்றவாளிகள் தொடர்பாக உரிய நேரத்தில், முழுமையான தகவல் பரிமாற்றத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள மோடி,

* இது தொடர்பாக சிறப்பு நிதி நடவடிக்கை பணிக்குழு ஏற்படுத்தவும், அந்தக்குழு பொருளாதார குற்றவாளிகள் என்பதற்கான இலக்கணத்தை வகுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்