தலைநகர் டெல்லியில் விவசாயிகள் மாபெரும் பேரணி

விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில், விவசாயிகள் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது.
தலைநகர் டெல்லியில் விவசாயிகள் மாபெரும் பேரணி
x
விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில், விவசாயிகள் பங்கேற்ற மாபெரும்  பேரணி நடைபெற்றது. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள், தலைநகர் டெல்லியில் குவிந்தனர். தமிழகத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி பேரணியில் பங்கேற்றனர். நாடாளுமன்றம் நோக்கி புறப்பட்ட இந்த பேரணிக்கு முன்பாக ஜந்தர்மந்தரில்,
தர்ணா போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி , இடது சாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி. ராஜா, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா மற்றும் சரத்யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு, ஆதரவு தெரிவித்தனர். 
விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று போராட்டத்தில் பங்கேற்ற ராகுல்காந்தி உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்