சோதனை சாவடியில் புகுந்த காட்டு யானை : அலறியடித்து சிதறி ஓடிய காவலர்கள்..

சபரிமலைக்கு செல்லும் வழியில், எலவுங்கல் சோதனை சாவடியில், காட்டு யானை ஒன்று திடீரென்று புகுந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை அச்சுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சோதனை சாவடியில் புகுந்த காட்டு யானை : அலறியடித்து சிதறி ஓடிய காவலர்கள்..
x
சபரிமலைக்கு செல்லும் வழியில், எலவுங்கல் சோதனை சாவடியில், காட்டு யானை ஒன்று திடீரென்று புகுந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை அச்சுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று இரவு பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்த போது, அலுவலகத்திற்கு வெளியே ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து, வெளியே வந்த பார்த்த காவலர்கள், காட்டு யானையை கண்டு அச்சத்துடன் நாலா பக்கமும் சிதறி ஓடினர். காட்டு யானையும் காவலர்களை விடாமல் துரத்திச் சென்றது. பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு, யானை காட்டுக்குள் சென்றது. 

Next Story

மேலும் செய்திகள்