சந்திரபாபு நாயுடுவை விட அவரது பேரனுக்கு 6 மடங்கு சொத்து

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை விட அவரது 3 வயது பேரன் தேவன்ஸ்க்கு சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட இந்தாண்டு அதிகரித்துள்ளது.
சந்திரபாபு நாயுடுவை விட அவரது பேரனுக்கு 6 மடங்கு சொத்து
x
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை விட அவரது 3 வயது பேரன் தேவன்ஸ்க்கு சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட இந்தாண்டு அதிகரித்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு 2 புள்ளி 53 கோடியில் இருந்து 3 கோடி ரூபாயாக அதிகரித்துள்ள நிலையில், பேரன் தேவன்ஸ் சொத்து மதிப்பு 11 புள்ளி 54 கோடியில் இருந்து 18 புள்ளி 71 கோடியாக அதிகரித்துள்ளது. தாத்தா சந்திரபாபு நாயுடு சொத்தை விட பேரன் தேவன்ஸ் சொத்து 6 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் சந்திரபாபு நாயுடுவின் குடும்ப சொத்து மதிப்பு 69 புள்ளி 28 கோடியில் இருந்து 81 புள்ளி 63 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்