சத்தீஸ்கர் சட்டப்பேரவை இரண்டாம் கட்ட தேர்தல் : மாலை 5 மணி வரை 64.80% வாக்குகள் பதிவு

சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட தேர்தலில், 5 மணி வரை 64 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
சத்தீஸ்கர் சட்டப்பேரவை இரண்டாம் கட்ட தேர்தல் : மாலை 5 மணி வரை 64.80% வாக்குகள் பதிவு
x
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சத்தீஸ்கரில் முதலாவதாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே, அந்த மாநிலத்தின் 18 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் முடிந்துள்ளது. மீதமுள்ள 72 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. காலையில் இருந்தே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். கவார்தா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநில முதலமைச்சர் ராமன் சிங் வாக்களித்தார். இன்று மாலை 5 மணி நிலவரப்படி, மொத்தம் 64 புள்ளி 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்