"சபரிமலை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது" - உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு

சபரிமலை வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.
சபரிமலை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு
x
* சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, கோயிலுக்கு செல்ல முற்படும் பெண்களை, பக்தர்கள் தொடர்ந்து தடுத்தி நிறுத்தி வருகின்றனர். 

* தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் வரும் ஜனவரி 22-ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு வழக்கறிஞர் மேத்யூ நெடும்பாறா முறையிட்டார்.

* ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது. இதையடுத்து வழக்கு, ஏற்கனவே அறிவித்தபடி, ஜனவரி 22-ஆம் தேதி விசாரிக்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்