கரடியை விரட்ட மரத்தை எரித்த வனத்துறையினர் : வேகமாக பரவும் வீடியோ காட்சிகள்

மரத்தின் மீது ஏறிய கரடியை துரத்துவதற்காக, மரத்தையே வனத்துறை அதிகாரிகள் எரித்த காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கரடியை விரட்ட மரத்தை எரித்த வனத்துறையினர் : வேகமாக பரவும் வீடியோ காட்சிகள்
x
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள எம்மிக்கனூர் என்ற கிராமத்திற்குள் கரடி ஒன்று புகுந்துள்ளது. அங்கிருந்த மரத்தில் ஏறிய கரடியை விரட்டுவதற்காக வனத்துறை அதிகாரிகள் பட்டாசுகளை வெடித்துள்ளனர். ஆனால், பொதுமக்கள் சூழ்ந்து விட்டதால், மரத்திலேயே அந்த கரடி இருந்து விட்டது. இதனால், நீளமான கம்பில் துணியை சுற்றி தீவைத்துள்ளனர். வனத்துறை அதிகாரிகளின் இந்த செயலால், மரத்தில் இருந்த இலைகள் எரிய தொடங்கின. வெப்பம் அதிகமானதால், மரத்தில் இருந்து குதித்து, காட்டுப் பகுதிக்குள் கரடி ஓடியது. விலங்குகளை காப்பாற்ற வேண்டிய வனத்துறை அதிகாரிகளின் இந்த செயல்பாடு குறித்த வீடியோ காட்சிகள், வேகமாக பரவி வருகிறது. இதற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்