உலக நீரிழிவு தினம் அனுசரிப்பு : சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணி

புதுச்சேரியில் சர்வதேச நீரிழிவு தினத்தையொட்டி, சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
உலக நீரிழிவு தினம் அனுசரிப்பு : சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணி
x
புதுச்சேரியில் சர்வதேச நீரிழிவு தினத்தையொட்டி, சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. தலைமை செயலகத்திலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை சுகாதாரத்துறை இயக்குநர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி  மாணவர்கள் கலந்துகொண்டு  விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பல்வேறு முக்கிய விதிகள் வழியாக சென்ற பேரணியானது இறுதியில் கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே நிறைவடைந்து.

Next Story

மேலும் செய்திகள்