5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் : சத்தீஸ்கரில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு

5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் : சத்தீஸ்கரில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு
x
* மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிஜோராம் ஆகிய 5 மாநிலங்களில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.  நவம்பர் 12, 20, 28 மற்றும் டிசம்பர் 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. 

* அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை 18 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கான முழு ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

* முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றமான இடங்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 5 மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 11ம் தேதி எண்ணப்படுகின்றன.

Next Story

மேலும் செய்திகள்