ரூ. 21 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு : தலைமறைவாக இல்லை என வீடியோ வெளியிட்டு பரபரப்பு

நிதி நிறுவனத்திடம் இருந்து 21 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட வழக்கில் ஆஜரான பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டியிடம் பெங்களூரு குற்றபிரிவு போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.
ரூ. 21 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு : தலைமறைவாக இல்லை என வீடியோ வெளியிட்டு பரபரப்பு
x
நிதி நிறுவனத்திடம் இருந்து 21 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட  வழக்கில் ஆஜரான பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டியிடம் பெங்களூரு குற்றபிரிவு போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.  இந்த வழக்கில் தான் தலைமறைவாக இல்லை என கூறி முன்னதாக வீடியோ பதிவை ஒன்றை ஜனார்த்தன் ரெட்டி வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ வெளியான சுமார் அரை மணி நேரத்தில் அவர் பெங்களூரு சாம்ராஜ் பேட் பகுதியில் உள்ள மத்திய குற்ற பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜரானார். விசாரணை முடிவடைந்த பிறகு அவர் கைது செய்யபடலாம் என்று கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்