ஒரு லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வரி வசூல்...

ஏற்றுமதிகளுக்கு ஜி.எஸ்.டி வரி கிடையாது என்பதால்,ஏற்றுமதி பொருட்களின் உற்பத்திக்காக வாங்கப்படும் இடு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரிகளை அரசிடம் இருந்து திரும்பப் பெற்று கொள்ள முடியும்.
ஒரு லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வரி வசூல்...
x
* ஏற்றுமதிகளுக்கு ஜி.எஸ்.டி வரி கிடையாது என்பதால்,
ஏற்றுமதி பொருட்களின் உற்பத்திக்காக வாங்கப்படும் 
இடு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரிகளை அரசிடம் இருந்து
திரும்பப் பெற்று கொள்ள முடியும்.

* திருப்பூர், கரூர் பகுதிகளை சேர்ந்த ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு ஜி.எஸ்.டி வரி திரும்ப கிடைப்பதில் பல மாதங்களாக சிக்கல்கள், தாமதங்கள் இருந்தன. 

* அக்டோபர் 31ஆம் தேதி முடிய, 82 ஆயிரத்து 775 கோடி ரூபாய்
அளவுக்கு ஏற்றுமதியாளர்களுக்கு ஜி.எஸ்.டி வரி பாக்கி,
திரும்ப அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் 
தெரிவிக்கிறது. 

* மொத்தம் உள்ள நிலுவை தொகையான 88 ஆயிரத்து175 
கோடியில் இது 93.8 சதவீதம் ஆகும். மீதி உள்ள 5400 கோடி
ரூபாய் பாக்கித் தொகையும் விரைவில் திருப்பி அளிக்கப்படும்
என்று தெரிகிறது. 

* இது சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கு     
மிகுந்த பயனளிக்கும் என்று கருதப்படுகிறது. 42 ஆயிரத்து 125 கோடி அளவுக்கு உள்ளீட்டு வரிகளை திரும்பப் பெற தொழில் நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. 

* இதில் இன்னும் 2 ஆயிரத்து 305 கோடி ரூபாய் தான் நிலுவையில் உள்ளது. மாநிலங்களுக்கு இடையே நடக்கும் வர்த்தகத்தில் விதிக்கப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரி சம்பந்தப்பட்ட கோரிக்கைகளில், 93 சதவீதம் திருப்பி 
அளிக்கப்பட்டுள்ளது.

* அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் ஒரு லட்சம் கோடியை
தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.




Next Story

மேலும் செய்திகள்