பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முடிவு எந்த அளவுக்கு நாட்டை பாதிக்கும் என்பதை நினைவுப்படுத்தும் நாள் இன்று - மன்மோகன் சிங்

பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் விபரீத முடிவு எந்த அளவுக்கு நாட்டை நீண்டக் காலத்துக்கு பாதிக்கும் என்பதை நினைவுப்படுத்தும் நாள் இன்று என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முடிவு எந்த அளவுக்கு நாட்டை பாதிக்கும் என்பதை நினைவுப்படுத்தும் நாள் இன்று - மன்மோகன் சிங்
x
பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் விபரீத முடிவு எந்த அளவுக்கு நாட்டை நீண்டக் காலத்துக்கு பாதிக்கும் என்பதை நினைவுப்படுத்தும் நாள் இன்று என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

* 2016 ஆம் ஆண்டு இதே நாளில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை, இந்திய பொருளாதாரத்துக்கும், சமூகத்துக்கும் எத்தகைய பேரழிவை ஏற்படுத்தியது என்பதற்கு ஒவ்வொருவரும் சாட்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

* பிரதமர் எடுத்த முடிவு ஆக்கப்பூர்வமாக சிந்திக்காமல் எடுத்த அவசர முடிவு என்றும், இதனால் சமூகத்தில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளதையும் மன்மோகன் சிங் சுட்டிக்காட்டி உள்ளார்.

* சிறு, குறு, நடுத்தர தொழில்கள் இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என்றும், வேலை வாய்ப்புகள் பறிபோனது மட்டுமல்லாது, புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பதையும் மன்மோகன் சிங் சுட்டிக்காட்டி உள்ளார்.

* 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி வெளியிட்ட இந்த அறிவிப்பால் ஏற்படபோகும் எதிர்மறை விளைவுகளை நாம் இன்னும் முழுமையாக அனுபவிக்கவில்லை என்றும் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

* நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்குவதில் முழுமையான புரிதலை பெற்று, அதனை கவனமுடன் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இன்றைய தினம் உணர்த்துவதாகவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்