"வங்கிக் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் பட்டியல் எங்கே?" - ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ்

வங்கிக் கடனை திரும்ப செலுத்தாதவர்களின் பட்டியலை ஏன் வெளியிடவில்லை என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு தேசிய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வங்கிக் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் பட்டியல் எங்கே? - ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ்
x
வங்கிகளில் 50 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் பெற்று, திருப்பி செலுத்தாதவர்களின் பட்டியலை அளிக்குமாறு, ரிசர்வ் வங்கியிடம் மத்திய தகவல் ஆணையம் கேட்டிருந்தது. பட்டியலை உடனடியாக 
அளிக்குமாறு உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், ரிசர்வ் வங்கி, பட்டியலை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத தங்களுக்கு, ஏன் அதிகபட்ச அபராதம் விதிக்கக்கூடாது என்பது குறித்து, 16-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல, வாராக்கடன்கள் பற்றி ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எழுதிய கடிதத்தை வெளியிடுமாறும் பிரதமர் அலுவலகம், ரிசர்வ் வங்கி உள்ளிட்டவற்றிடம் தகவல் ஆணையம் கேட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்