தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 77-வது இடம்

தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியலில், இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77-வது இடத்தை பிடித்துள்ளது.
தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 77-வது இடம்
x
* தொழில் தொடங்குவதற்கு எளிதான சூழல் உள்ள நாடுகளின் பட்டியலை உலக வங்கி ஆண்டுதோறும் பட்டியலிட்டு வெளியிட்டு வருகிறது.

* அதன்படி, மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2014-ல் ஆட்சிக்கு வந்த போது, உலக வங்கி வெளியிட்ட தொழில் தொடங்க ஏற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 142-வது இடத்தில் இருந்தது.

* 2016-ம் ஆண்டில், 12 இடங்கள் முன்னேறி 130 வது இடத்தை இந்தியா பிடித்தது. இதன் பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடு, வர்த்தகம் தொடங்குவதை எளிமைப்படுத்தியது உள்ளிட்ட நடவடிக்கையால் 2017-ம் ஆண்டு இந்தியா 100-வது இடத்திற்கு முன்னேறியது.

* இந்த நிலையில், உலக வங்கி தற்போது வெளியிட்டுள்ள பட்டியலில், இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77-வது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த 
முன்னேற்றம் உலக நாடுகள் மத்தியில் அபரிமிதமான வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

* இதன் மூலம், கடந்த 2014-ம் ஆண்டில் தெற்காசிய நாடுகள்  அளவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்