சபரிமலை ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த சபரிமலை ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில், தென்மாநிலங்களின் அமைச்சர்கள் யாரும் பங்கேற்காததால் கேரள அரசு அதிருப்தியடைந்துள்ளது.
சபரிமலை ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
x
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த சபரிமலை ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில்,   தென்மாநிலங்களின் அமைச்சர்கள் யாரும் பங்கேற்காததால் கேரள அரசு அதிருப்தியடைந்துள்ளது. சபரிமலை மண்டல பூஜையை முன்னிட்டு, கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடக்கவிருந்த முக்கிய ஆலோசனைக்  கூட்டத்தில், பங்கேற்குமாறு தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்களின் முதலமைச்சர்கள், அறநிலையத்துறை அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு கேரள அரசு அழைப்பு விடுத்திருந்தது.  ஆனால் இக்கூட்டத்தில் அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர். அமைச்சர்கள் யாரும் பங்கேற்காததால் பினராயி விஜயனும் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 

Next Story

மேலும் செய்திகள்