"ரிசர்வ் வங்கி சட்டம் 7-வது பிரிவை அமல்படுத்த அவசியம் என்ன?" - முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி

முன் எப்போதும் இல்லாத வகையில், ரிசர்வ் வங்கி சட்டத்தின் ஏழாவது பிரிவை அமல்படுத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்று, மத்திய அரசுக்கு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரிசர்வ் வங்கி சட்டம் 7-வது பிரிவை அமல்படுத்த அவசியம் என்ன? - முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி
x
முன் எப்போதும் இல்லாத வகையில், ரிசர்வ் வங்கி சட்டத்தின் ஏழாவது பிரிவை அமல்படுத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்று , மத்திய அரசுக்கு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஏழாவது பிரிவு அமல்படுத்தப்பட்டால், மோசமான விளைவுகள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் நிதி நெருக்கடி இருந்த போதிலும், அப்போதைய அரசு ஏழாவது பிரிவை அமல்படுத்த முனையவில்லை என்று தெரிவித்துள்ள சிதம்பரம், நாட்டின் பொருளாதார நிலை குறித்த தகவல்களை மத்திய அரசு மறைப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்