2 நாள் பயணமாக ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி

இந்தியா - ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, டோக்கியோ சென்றுள்ளார்.
2 நாள் பயணமாக ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி
x
* டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்ற  பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், இம்பீரியல் ஓட்டலுக்கு சென்ற பிரதமர், ஜப்பான் வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.  

* இரண்டு நாள் பயணத்தில், இந்தியா - ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் மோடி கலந்து கொள்கிறார். மேலும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தனது வீட்டில் அளிக்கும் விருந்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். 

* அப்போது, இருதரப்பு உறவு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்