மும்பை - கோவா இடையே கப்பல் போக்குவரத்து தொடக்கம்

மும்பையில் நடைபெற்ற விழாவில் மும்பை, கோவா இடையிலான உள்நாட்டு கப்பல் போக்குவரத்தை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நேற்று தொடங்கி வைத்தார்.
மும்பை - கோவா இடையே கப்பல் போக்குவரத்து தொடக்கம்
x
புதிய உள்நாட்டு கப்பல் போக்குவரத்து முனையத்தை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி மற்றும் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். புதிய முனையம் 300 முதல் 400 பயணிகளை ஏற்றிச்செல்லும் கப்பல்கள் புறப்பட்டுச் செல்ல ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. முழுவதும் குளிர்சாதன வசதிகளுடன், நவீன விளக்குகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில் பேசிய மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, அடுத்த 5 ஆண்டுகளில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து துறையில் இரண்டரை லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிமைக்கும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்