"சபரிமலையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம்" - தேவசம்போர்டு தலைவர்

சபரிமலையில் நடைபெற்ற சம்பவங்களை உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம் - தேவசம்போர்டு தலைவர்
x
சபரிமலையில் நடைபெற்ற சம்பவங்களை உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், போராட்டம் மற்றும் பக்தர்களின் உணர்வுகளை தெரிவிக்கும் வகையில் விளக்க அறிக்கை ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கூறினார். 

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவை எதிர்த்து, 25க்கும் மேற்பட்ட மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும் அந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது தேவசம் போர்டின் நிலைப்பாடு பற்றி தெரிவிக்கப்படும் என்றும் கூறினார். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநில முதலமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளதாகவும் அதில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக கருத்து கேட்கப்பட உள்ளதாகவும் பத்மகுமார் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்