இரண்டு பெண்களை அழைத்து வந்தால் கோவிலை பூட்டிவிடுவேன் என தந்திரி தெரிவித்தார் - கேரள ஐ.ஜி ஸ்ரீஜித்

2 பெண்களையும் தரிசனத்துக்கு அழைத்து வந்தால் கோவில் நடையை சாத்திவிடுவேன் என தந்திரி தெரிவித்ததாக, கேரள போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீஜித் தெரிவித்துள்ளார்.
இரண்டு பெண்களை அழைத்து வந்தால் கோவிலை பூட்டிவிடுவேன் என தந்திரி தெரிவித்தார் - கேரள ஐ.ஜி ஸ்ரீஜித்
x
பத்திரிகையாளர் கவிதா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ரஹேனா பேகம் ஆகியோரை சபரிமலை அய்யப்பன் கோவில் வளாகத்துக்கு அழைத்து சென்றதாக ஐ.ஜி. ஸ்ரீஜித் தெரிவித்துள்ளார். சபரிமலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள ஐ,ஜி. ஸ்ரீஜித், நாங்கள் தந்திரி பதிலுக்காக வெகுநேரம் காத்திருந்தோம். ஆனால் 2 பேரும் அய்யப்பனை தரிசனம் செய்ய, கோவிலை திறக்க தந்திரி மற்றும் தலைமை குருக்கள் மறுத்துவிட்டதாகவும் கூறினார். மீறி 2 பேரையும் அழைத்து வந்தால், கோவில் நடையை சாத்திவிடுவோம் என தந்திரி ராஜிவரூ கண்டரரூ தெரிவித்ததாகவும், இது பாரம்பரிய பேரழிவாக அமைந்துவிடும் என்றும் ஐ.ஜி. தெரிவித்தார்.  கோவில் வரை அவர்கள் இருவரையும் பத்திரமாக அழைத்து ​சென்றோம் என்றும், தரிசனம் என்பது, சம்மந்தப்பட்ட தந்திரியின் இசைவோடு நடைபெறுவதும் என்றும் ஸ்ரீஜித் தெரிவித்தார். 2 பெண்களுக்கும் எத்தகைய பாதுகாப்பு தேவையோ அதனை அளித்ததாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்