ஆளுநர் கிரண்பேடியை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்

புதுச்சேரி சட்டக்கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சட்டக்கல்லூரி மாணவர்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆளுநர் கிரண்பேடியை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்
x
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் 600 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து சட்டக்கல்லூரி முதல்வர்களுடன் ஆளுநர் கிரண்பேடி ஆய்வு நடத்தினார். ஆலோசனை முடித்து வெளியே வந்த ஆளுநர் கிரண்பேடியிடம் மாணவர்கள் மனு அளித்தனர். ஆனால் அவர் சரியான பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அவரை கல்லூரி வளாகத்திற்குள் சிறைவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்