"சபரிமலை ஆச்சாரங்கள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன" - சசிக்குமார் வர்மா, இளைய மகாராஜா

சபரிமலை ஆகம விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாகவும், பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் பந்தள மகாராஜா குடும்பத்தினர் தெரிவித்துள்ளன
சபரிமலை ஆச்சாரங்கள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன - சசிக்குமார் வர்மா, இளைய மகாராஜா
x
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக திருவனந்தபுரம் நந்தன்கோட்டில்
உள்ள தேவஸ்தான அலுவலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சபரிமலை ஐயப்பன் கோயில் தலைமை தந்திரி, பந்தளம் அரச குடும்பத்தினர், மற்றும் ஐயப்ப சேவா சங்கம் உள்ளிட்ட பல அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வலியுறுத்தப்பட்டது. ஆனால், அது தொடர்பாக முடிவு எதுவும் எடுக்கப்படாததால், கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பந்தளம் அரண்மனை இளைய மகாராஜா, சபரிமலை போராட்டத்திற்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறினார். 


மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்வது தொடர்பாக தேவசம் போர்டு எந்த முடிவையும் எடுக்கவில்லை. காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஆச்சாரங்கள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன.ஒரு சில அமைப்புகள் போராட்டம் நடத்துகிறார்கள். அது அவர்களது உரிமை. ஆனால், நாங்கள் அதை செய்யவில்லை.


Next Story

மேலும் செய்திகள்