பெட்ரோல், டீசல் விலை : பிரதமர் மோடி ஆலோசனை

கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் போது அதற்கான தொகையை அமெரிக்க டாலருக்குப் பதிலாக இந்திய ரூபாயில் பெறுவதற்கு வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என, பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை : பிரதமர் மோடி ஆலோசனை
x
டெல்லியில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன உயர் அதிகாரிகளுடன், பிரதமர் மோடி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். 

அப்போது பேசிய அவர்,  கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியா போன்ற எண்ணெய் நுகர்வு நாடுகள், கடுமையான பொருளாதார சவால்களை சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

போதுமான உற்பத்தி இருந்தபோதிலும், எண்ணெய் உற்பத்தி நாடுகள் கடைபிடிக்கும் தனித்துவமான சில நடவடிக்கைகளால், எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது என அவர் தெரிவித்தார். 

எண்ணெய் உற்பத்தி மற்றும் நுகர்வு நாடுகளுக்கு இடையே கூட்டு நிலவினால், விலை குறைய வாய்ப்புள்ளது என மோடி தெரிவித்தார். 

மேலும், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் போது அதற்கான தொகையை அமெரிக்க டாலருக்குப் பதிலாக இந்திய ரூபாயில் பெறுவதற்கு வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்