சாமுண்டீஸ்வரி கோயிலில் தசரா தீபம் ஏற்றம் - பாரம்பரிய நடனங்களை பார்த்து ரசித்த மக்கள்

உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவையொட்டி, சாமுண்டீஸ்வரி கோயிலில் தீபம் ஏற்றப்பட்டது.
சாமுண்டீஸ்வரி கோயிலில் தசரா தீபம் ஏற்றம் - பாரம்பரிய நடனங்களை பார்த்து ரசித்த மக்கள்
x
தசரா விழாவையொட்டி, மைசூர் அரண்மனை விழாக்கோலம் பூண்டுள்ளது. இன்று காலை நந்திதுவஜா கோல் புனிதா பூஜை நடந்தது. கலசம் தாங்கிய மிக உயரமான கம்பு ஒன்றை இடுப்பில் கட்டிக்கொண்டு, கலைஞர்கள் நடனமாடினர். பாரம்பரிய இசை கருவிகள் வாசிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, மைசூரு அரண்மனை வாயிலில் ஒட்டகங்கள், யானைகளின் அணிவகுப்பு நடந்தது. யட்சகானம், கிராமியக் கலைகளை கலைஞர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். மைசூரு அரண்மனையில் குவிந்த உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலைநிகழ்ச்சிகளை பார்த்து மகிழ்ந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்