டிட்லி புயல் கரையை கடந்தது
பதிவு : அக்டோபர் 11, 2018, 08:48 AM
டிட்லி புயல் இன்று காலை கரை கடந்ததை அடுத்து ஒடிசா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் உருவான டிட்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறியது. அது ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும்,  ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் இடையே இன்று காலை கரையை கடந்தது.  இதனால் ஒடிசாவின் கஞ்சன் மாவட்டம் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசி வருகிறது. 

டிட்லி புயல் கரை கடந்தது - ஒடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

டிட்லி புயல் காரணமாக கோபால்பூரில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் நேரில் ஆய்வு செய்தார், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், 15 மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 5 மாவட்டங்களில் பள்ளி ,கல்லூரிகளுக்குவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"டிட்லி புயலால் தமிழகத்துக்கு மழை இல்லை" - வானிலை ஆய்வு மையம்

ஒடிஷா மற்றும் வடக்கு ஆந்திரா அருகே, கரையை கடந்த 'டிட்லி' புயல், தற்போது வலு குறைந்து தாழ்வு மண்டலமாக, கங்கை சமவெளியில் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் மழைக்கு எந்த வாய்ப்பும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

254 views

கன்னியாகுமரி புயல் எச்சரிக்கை :215 படகுகள் கரை திரும்பின

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம், மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கடலுக்கு சென்ற 411 விசைப்படகுகளில் 215 படகுகள் கரை திரும்பி உள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

131 views

கரையைக் கடந்த 'டேயி' புயல்... ஒடிசாவின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கின...

புயல் காரணமாக பெய்த கனமழையால், ஒடிசாவின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

78 views

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் வேலைநிறுத்தம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகளின் வேலைநிறுத்தம் நடைபெற்றுவரும் நிலையில் அக்கட்சிகளை சேர்ந்தவர்கள், பல்வேறு இடங்களில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

328 views

பிற செய்திகள்

சிபிஎஸ்இ பாடநூலில் தொடர்ந்து சாதி குறியீடு - ராமதாஸ் குற்றச்சாட்டு

சிபிஎஸ்இ பாடநூலில் உள்ள தவறைத் திருத்தாமல், நாடார் சமுதாயத்தினரை தொடர்ந்து இழிவுபடுத்துவதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

6 views

"அறுவடை செய்த நெல்களை அரசு கொள்முதல் செய்யவில்லை" - விவசாயிகள் நூதன போராட்டம்

தஞ்சையில் அறுவடை செய்த குறுவை நெல்லை அரசு கொள்முதல் செய்யவில்லை எனக் கூறி ஆட்சியர் அலுவலகம் முன்னர் உரலில் நெல்லை கொட்டி இடித்து விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.

11 views

திட்டக்குடி : குழந்தையை கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை

திட்டக்குடி அருகே இரண்டரை வயது குழந்தையை கொன்றுவிட்டு, தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

376 views

போதை பொருளுக்காக வடமாநில இளைஞர் அடித்து கொலை

சென்னையில், பட்டபகலில், போதை பொருள் கேட்டு வடமாநில இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

156 views

"முழுநேர அரசியல்வாதிகள் அரசின் கஜானாவை காலி செய்தனர்" - கமல்ஹாசன்

முழுநேர அரசியல்வாதிகளால், அரசு கஜானா காலியாகிவிட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

21 views

திருவள்ளூர் : பசுமையை வலியுறுத்தி மாரத்தான் பந்தயம்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டியும், பசுமை, தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தியும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.