முகாமில் பயிற்சி பெற்ற காட்டு யானை, தனியார் பேருந்து மோதி பலி...

கர்நாடக மாநிலம் குடகு யானைகள் பயிற்சி முகாமில், பேருந்து மோதியதில், 46 வயது ஆண் யானை உயிரிழந்தது.
முகாமில் பயிற்சி பெற்ற காட்டு யானை, தனியார் பேருந்து மோதி பலி...
x
* கடந்த 2014ஆம் ஆண்டு, பெங்களூரு பன்னார்கட்டா வனப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை தாக்கியதில் 20 பேர் காயமடைந்தனர். அந்த யானையை பிடித்து, குடகு மாவட்டத்தில் உள்ள யானைகள் புத்துணர்ச்சி முகாமில் வனத்துறையினர் சேர்த்தனர். ரவுடித்தனம் செய்ததால் யானைக்கு 'ரவுடி ரங்கா' என பெயரும் சூட்டியிருந்தனர். ஆறு மாதங்களில் பாகன்களுக்கு கட்டுப்பட ஆரம்பித்த அந்த யானை, நல்ல நிலைக்கு மாறியது. 

* இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில், பயிற்சி முகாமுக்கு அருகில் உள்ள சாலைக்கு யானை ரங்கா வந்துள்ளது. அப்போது, கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று மோதியதில், ரங்காவின் முதுகெலும்பு முறிந்தது. ரத்தம் வழிய சுருண்டு கிடந்த ரங்காவுக்கு கால்நடை மருத்துவர் முஜிப் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர்.  5 மணி நேரமாக நீடித்த சிகிச்சை பலனின்றி யானை ரங்கா உயிரிழந்ததால், புத்துணர்ச்சி முகாமில் சோகம் ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்