அடுத்தடுத்து உயிரிழந்த சிங்கங்கள் - சிங்கங்களை பாதுகாக்கும் முயற்சி தீவிரம்

குஜராத்தில், சிங்கங்கள் உயிரிழப்பது குறித்த தகவல்களை, பதிவு செய்யும் செய்தித் தொகுப்பு
அடுத்தடுத்து உயிரிழந்த சிங்கங்கள் - சிங்கங்களை பாதுகாக்கும் முயற்சி தீவிரம்
x
குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் காட்டில், சிங்கங்கள் தொடர்ந்து மர்மமாக இறந்து வருகிறது. சுமார் 20 நாட்களுக்குள் 23 சிங்கங்கள் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செப்டம்பர் மாதம் 12-13ம் தேதிகளில், ஒரே இடத்தில் 12 சிங்கங்கள் இறந்து கிடந்தன. 'எதற்காக, இப்படி ஒரே நேரத்தில், இத்தனை சிங்கங்கள் இறந்து போயின என்று தெரியாமல் வனத்துறையினர் தவித்தனர். அவைகளுக்குள் ஏற்பட்ட சண்டை காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், எந்த சிங்கத்தின் உடலிலும் பெரிய காயங்கள் இல்லை. 

உயிரிழப்பிற்கான காரணங்களை ஆராய்ந்து கொண்டிருந்த வேளையில், அடுத்த நான்கு நாட்களில் மேலும் மூன்று சிங்கங்கள் உயிரிழந்தன. இதன்பின்னர், வனத்துறையினர் இந்த விஷயத்தில் கவனம் கொள்ளத் தொடங்கினர். வைரஸ் தாக்குதல், 11 சிங்கங்களுக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், மற்ற சிங்கங்களுக்கு அந்த பாதிப்பும் இல்லை. இங்கிருந்து, 31 சிங்கங்கள் மீட்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

இங்கு, நூற்றுக்கணக்கான ஆசிய சிங்கங்கள் இருக்கின்றன. இந்த சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால், இதனை அழிந்துவரும் இனங்களில் ஒன்றாக, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது. 
ஆசிய சிங்கங்களின் கடைசிப் புகலிடம் கிர் வனப்பகுதியாக கருதப்படுகிறது. 

வயது மூப்பு, நோய்த் தொற்று காரணமாக, இயல்பாகவே ஆண்டுக்கு, 100 சிங்கங்கள் வரை உயிரிழக்கும். அதிகபட்சமாக மழைக் காலத்தில் 31 சிங்கங்கள் வரை உயிரிழக்கும். ஆனால், இந்த மரணம், மர்மத்தை அதிகரித்துள்ளது. 

சிங்கங்களைக் கண்காணிப்பதற்கும், பாதிக்கப்பட்ட சிங்கங்களை சிகிச்சை மையத்துக்கு அனுப்புவதற்கும், 64 குழுக்கள் அமைக்கப்பட்டன. திடீர் இறப்பு குறித்து கண்டறிவதற்காக மத்திய அரசின் வன நிபுணர்கள் குழு, கிர் காடுகளுக்கு சென்று ஆய்வு நடத்தியது. 

2015-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, கிர் காடுகளில் 523 சிங்கங்கள் இருந்தன. அதில், 109 ஆண் சிங்கங்களும், 201 பெண் சிங்கங்களும், 73 இளம் சிங்கங்களும், 140 குட்டிகளும் இருந்த தாக, புள்ளி விவரங்களை தெரிவித்துள்ளன.  

Next Story

மேலும் செய்திகள்