திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா : பொன் ராதாகிருஷ்ணன் கேரள அமைச்சர்கள் பங்கேற்பு
பதிவு : அக்டோபர் 07, 2018, 12:39 PM
நவராத்திரி பூஜைக்காக பத்மநாபபுரத்தில் இருந்து, சுவாமி சிலைகள் மற்றும் பண்டைய மன்னரின் உடைவாள் ஆகியன திருவனந்தபுரம் நோக்கி புறப்படும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.
நவராத்திரி பூஜைக்காக,  பத்மநாபபுரத்தில் இருந்து, சுவாமி சிலைகள் மற்றும் பண்டைய மன்னரின் உடைவாள் ஆகியன திருவனந்தபுரம் நோக்கி புறப்படும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து பண்டைய மன்னரின் உடைவாள் மற்றும் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, குமாரகோவில் முருகன், தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய 3 சாமி சிலைகள் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டது.

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக இவை எடுத்துச் செல்லப்படுகின்றன.  இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கேரள அமைச்சர்கள் கடகம்பள்ளி சுரேந்திரன், கடனப்பள்ளி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கேரள - தமிழக மக்களிடையே ஒற்றுமையை  பறைசாற்றும் வகையில் இவ்விழா நடைபெகிறது.

சபரிமலையை பாதுகாக்க வலியுறுத்தி இளைஞர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு :"நவராத்திரி பவனி" துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர் திடீரென, சபரிமலையில் பெண்களை அனுமதிக்க உத்தரவிட்டதற்கு எதிராகவும், சபரிமலையை பாதுகாக்க வலியுறுத்தியும், கைகளால் எழுதி வைத்திருந்த காகிதத்தை தூக்கிக் காட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் ஐயப்பனின் சரணங்களையும் பாடினர். இதையடுத்து, அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, இளைஞர்கள் சமாதானம் அடைந்தனர்.

பிற செய்திகள்

உண்மையான பக்தி கொண்ட பெண்கள் சபரிமலைக்கு செல்லமாட்டார்கள் - ரமேஷ் சென்னிதலா

சபரிமலை ஐயப்பன் மீது உண்மையான பக்தி கொண்ட குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் பெண்கள் அங்கு செல்ல மாட்டார்கள் என்று கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

16 views

அண்ணாவின் குடும்பத்தினருக்கு அரசு நிலத்தை மீண்டும் குத்தகைக்கு தர தமிழக அரசு தயார் - அமைச்சர் உதயகுமார்

அண்ணாவின் குடும்பத்தினருக்கு அரசு நிலத்தை மீண்டும் குத்தகைக்கு தர தமிழக அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

85 views

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இருப்பதை விஜயபாஸ்கர் ஒப்புக்கொண்டார் - ஸ்டாலின்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இருப்பதை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஒப்புக்கொண்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

22 views

கமல்ஹாசனால் பல தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் - அமைச்சர் கருப்பணன்

நடிகர் கமல்ஹாசனால் பல தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் நடத்திருப்பதாக அமைச்சர் கருப்பணன் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.

33 views

"உணவகத்தில் சாப்பிட்ட பஜ்ஜிக்கு பணம் தர மறுப்பு" - தி.மு.க. நிர்வாகி, ஆதரவாளர்கள் மீது போலீசில் புகார்

சென்னை ஆர் கே நகரில் உள்ள உணவகம் ஒன்றில் பஜ்ஜி சாப்பிட்ட திமுகவை சேர்ந்த மேற்கு பகுதி பொறுப்பு குழு உறுப்பினர் ராஜா பணம் தர மறுத்து ஊழியரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

43 views

மகளிர் பாதுகாப்பு : தனி செயலி அறிமுகம்

மக்கள் நீதி மய்யம் சார்பில், மகளிர் பாதுகாப்புக்காக ரவுத்திரம் என்ற பெயரில் புதிய செயலியை அக்கட்சியின் நிறுவன தலைவர் கமல்ஹாசன் அறிமுகம் செய்துள்ளார்.

1293 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.