சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு பிரதமர் பாராட்டு

சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு இணையதளப்பதிவில் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு பிரதமர் பாராட்டு
x
நேற்றைய தினம், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது, சட்டமன்ற தொகுதியான நெல்லித்தோப்பில், தூய்மை பணியை தொடங்கி வைத்தார். அப்போது அந்த பகுதியில்  ஏற்பட்டிருந்த கால்வாய் அடைப்பை உடனடியாக சரி செய்ய அதில் இறங்கிய அவர் சாக்கடையை அள்ளினார். 

புதுச்சேரி முதலமைச்சரின் இந்த செயலை பிரதமர் பாராட்டு உள்ளார். இது தொடர்பாக தமது இணையதளப்பதிவில் கருத்து தெரிவித்துள்ள மோடி, தூய்மை இந்தியா திட்டத்திற்கு முன்னுதாரனமாக இருந்து, மற்றவர்களை வழிநடத்துவது போல செயல்பட்ட நாராயணசாமிக்கு, வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்