"திருமணத்தை தாண்டிய தகாத உறவு குற்றமல்ல" - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

திருமணத்தை தாண்டிய உறவு தண்ட​னைக்கு உரிய குற்றமில்லை என்றும், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 497- ஐ ரத்து செய்வதாகவும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
திருமணத்தை தாண்டிய தகாத உறவு குற்றமல்ல - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு
x
* திருமண பந்தத்தை தாண்டிய உறவு குற்றமல்ல என்றும், அந்த சட்டப் பிரிவை ரத்து செய்யக் கோரியும் தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு  இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. 

* ஒரு பெண், தனது கணவரல்லாத வேறோருவருடன் திருமணத்தை தாண்டிய உறவு கொண்டால், தண்டனைக்குரிய குற்றம் என இந்திய தண்டனை சட்டப்பிரிவு 497-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த சட்டப்பிரிவுப்படி, குற்றத்தில் சம்பந்தப்பட்ட ஆணுக்கு தான் தண்டனை வழங்கப்படும். தகாத உறவில் ஈடுபடும் பெண்ணுக்கு தண்டனை கிடையாது.  

* இந்நிலையில், இந்த சட்டப்பிரிவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அதில், திருமண பந்தத்தை தாண்டிய உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கி உள்ளனர். 

* மேலும், தற்கொலைக்கு தூண்டாத பட்சத்தில், 497-வது பிரிவு பயனற்றது எனக் கூறிய நீதிபதிகள் அந்த சட்டப்பிரிவை நீக்கியும் உத்தரவிட்டுள்ளனர். 

* கணவருக்கு மனைவி அடிமை இல்லை என்றும், இருவரும் சரிசமமாக சமுதாயத்தில் மதிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

* திருமண முறிவுக்கு தகாத உறவு தான் காரணம் என்பதை ஏற்க முடியாது எனவும், இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். 

* மேலும், பெண்களின் உரிமையை உள்ளடக்கியது தான் அடிப்படை உரிமைகள் என்றும், பெண்களை சமமற்ற முறையில் நடத்தக் கூடாது எனவும் தெரிவித்த நீதிபதிகள், 

* சமூகம் எதிர்பார்ப்பதை பெண்கள் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்