ஆதார் எண் கட்டாயமா? இல்லையா? - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது

ஆதார் எண் கட்டாயமா இல்லையா என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது
ஆதார் எண் கட்டாயமா? இல்லையா? - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது
x
* நாட்டில், 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு, ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு திட்டங்களுக்கு, இந்த எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

* இந்நிலையில், குடிமக்களின் கருவிழி,  கைவிரல் ரேகை உள்ளிட்ட தனிப்பட்ட ரகசியங்களை பெற்று, ஆதார் எண் வழங்கியுள்ளதாகவும், இது, தனி மனித உரிமையை மீறும் செயல் என்றும் கூறி, ஆதாருக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

* இதனை விசாரித்த 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தனிமனித சுதந்திரம் என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. மேலும், ஆதாரை அனுமதிப்பதா, இல்லையா என்பது குறித்து 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்க உத்தரவிட்டது.

* இதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணை கடந்த மே மாதம் முடிந்த நிலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளிக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்