"பசு பாதுகாப்பு பெயரில் யாரையும் துன்புறுத்துவதை ஏற்க முடியாது" - மோகன் பகவத்

பசு பாதுகாப்பு என்ற பெயரில் யாரையும் துன்புறுத்துவதை ஏற்க முடியாது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
பசு பாதுகாப்பு பெயரில் யாரையும் துன்புறுத்துவதை ஏற்க முடியாது - மோகன் பகவத்
x
டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்று வந்த ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் 3 நாள் மாநாடு  நிறைவடைந்தது. 

மாநாட்டில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத், தேசியம் அடிப்படையில் இந்தியாவில் வாழும் எல்லோரும் இந்துக்களாகவே கருதப்படுவதாகவும், இதனை சிலர் ஏற்க மறுப்பதாகவும் தெரிவித்தார். 

பசு பாதுகாப்பு என்ற பெயரில் குழுவாக மக்களை தாக்குவதை ஏற்க முடியாது என்றும், சட்டத்தை யாரும் கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.  கலப்பு திருமணம் செய்தவர்கள் பட்டியலை எடுத்தால், அதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களே அதிகம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

இஸ்லாமியர்கள் இல்லாத இந்துத்வா என்பது நிறைவு பெறாது என்றும் மோகன் பாகவத் குறிப்பிட்டார். ஆர்.எஸ்.எஸ். மட்டுமல்ல ஒட்டுமொத்த ஜெயின் மற்றும் இஸ்லாமியர்களும் கோ சாலைகள் நடத்தி வருவதையும் மோகன்பகவத் குறிப்பிட்டார். இந்த மாநாட்டில் பல்வேறு தரப்பை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்