மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் : டெண்டுல்கர் பங்கேற்பு

சிறப்பு பூஜையில் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் டெண்டுல்கர், தனது மனைவி அஞ்சலியுடன் கலந்து கொண்டார்.
மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் : டெண்டுல்கர் பங்கேற்பு
x
மும்பையின் லால்பாக் பகுதியில் ராஜா வடிவில் பிரமாண்டமான விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் தேதி அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு, தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.  காலை 6 மணி முதல் பக்தர்கள், தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். திரை நட்சத்திரங்களும், பிரபலங்களும் இங்கு வந்து தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர். இந்நிலையில், சிறப்பு பூஜையில் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் டெண்டுல்கர், தனது மனைவி அஞ்சலியுடன் கலந்து கொண்டார்.  விழாக்குழுவினர் சார்பில் அவருக்கு, விநாயகர் சிறப்பை போற்றும் புத்தகம் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்