புதுச்சேரி கடைகளில் விற்பனை செய்யப்படும் சீன பூண்டு பட்டாசு...

புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாப் பாப் எனப்படும் சீன பூண்டு பட்டாசு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
புதுச்சேரி கடைகளில் விற்பனை செய்யப்படும் சீன பூண்டு பட்டாசு...
x
புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாப் பாப் எனப்படும் சீன பூண்டு பட்டாசு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சிறிய வடிவில் உள்ள இந்த பட்டாசை தரையில் தூக்கி எறிந்தாலே வெடிக்கும் தன்மை கொண்டது. இந்த பட்டாசு பள்ளி வளாகத்தின் முன்பு விற்பனை செய்யப்படுவதால் ஏராளமான மாணவர்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் ஆபத்துகள் நேரும் என்பதால் இதனை தடை செய்யக் கோரி அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர். சட்டப்பேரவை முன் திரண்ட அவர்கள் பட்டாசை தரையில் வெடித்துக் காட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்