"உள்நாட்டில் தயாரிக்கப்படும் எரிபொருளுக்கு முன்னுரிமை" - மத்திய அமைச்சர் நிதின்கட்கரி

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் எரிபொருள் கொண்டு இயக்கப்படும் வாகனங்களால் பேருந்து கட்டணங்கள் குறையும் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் எரிபொருளுக்கு முன்னுரிமை - மத்திய அமைச்சர் நிதின்கட்கரி
x
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மும்பையில் டீசலில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு பேருந்தை இயக்க 110 ரூபாய் செலவாவதாக தெரிவித்தார். இதே நாக்பூரில் எத்தனாலில் இயங்கும் குளிர்சாதன பேருந்து கிலோமீட்டருக்கு 78 ரூபாய் செலவில் இயக்கப்படுவதாகவும்,  மின்சாரத்தில் ஒரு பேருந்து கிலோ மீட்டருக்கு 50 ரூபாய் செலவிலும், மினி பேருந்து 27 ரூபாய் செலவிலும் இயக்கப்படுவதாகவும் நிதின் கட்கரி கூறினார். இதனால் பேருந்து கட்டணம் கணிசமான அளவு குறைவதுடன், சுற்றுச்சூழல் மாசு அடைவதும் குறைவதாக தெரிவித்த  நிதின் கட்கரி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எரிபொருளுக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

நாட்டின் மிகப் பெரிய பிரச்சனையாக சுற்றுச்சூழல் உள்ள நிலையில், இறக்குமதி, கட்டணம் மற்றும் சுற்றுச் சூழல் மாசுபடாத உள்நாட்டு எரிபொருளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கொள்கை ஒன்றை மத்திய அரசு உருவாக்கி உள்ளதாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார். அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எத்தனால் சந்தை உருவாகும் என்றும், அப்போது மாசு அளவு குறையும் என்றும் நிதின்கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்