நிவாரண முகாமில் மக்களுடன் ஓணம் கொண்டாடிய கேரள அமைச்சர்...

திருவனந்தபுரம் அருகே உள்ள வெள்ளாயணி கிராமத்தில் உள்ள முகாமில் உள்ளவர்களுடன் அமைச்ச​ர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஓணம் கொண்டாடினார்.
நிவாரண முகாமில் மக்களுடன் ஓணம் கொண்டாடிய கேரள அமைச்சர்...
x
திருவோணம் பண்டிகை நேற்று கேரள மக்களால் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி திருவனந்தபுரம் அருகே உள்ள வெள்ளாயணி கிராமத்தில் உள்ள முகாமில் உள்ளவர்களுடன் அமைச்ச​ர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஓணம் கொண்டாடினார். பின்னர் அங்கிருந்தவர்களுடன் விருந்துண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 500 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் பிற மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.ஓணம் கொண்டாட வைத்திருந்த தொகையை ஏராளமானோர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நிவாரண முகாம்களில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

வெள்ளத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள 11 ஆயிரத்து 465 முகாம்களில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் இன்றளவும் தங்கியுள்ளனர். அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், அனைத்து முகாம்களிலும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.  அனைவருக்கும் அறுசுவை உணவுடன் கூடிய திருவோண விருந்து பரிமாறப்பட்டது. அதற்கான ஏற்பாட்டை பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் செய்திருந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முகாம்களில் இருந்து வீடுகளுக்கு சென்றவர்களுக்கு அளிப்பதற்காக 177 டன் அரிசி தேவைப்படுவதாக தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு புதிய ஆடைகள்

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தம் புதிய ஆடைகளை ஒசூர் பகுதி திருநங்கைகள் அனுப்பி வைத்தனர். சேலைகள், குழந்தைகளுக்கான ஆடைகள், சோப்பு, பிஸ்கட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும்  வட்டாட்சியரிடம் திருநங்கைகள் வழங்கினர். அவை கேரளாவில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.     

Next Story

மேலும் செய்திகள்