காது கேட்கும் கருவி வாங்க வைத்திருந்த பணத்தை கேரள நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவன்...

காது கேட்கும் கருவி வாங்க வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை கேரள நிவாரண நிதிக்கு முதலமைச்சரிடம் வழங்கிய சிறுவன்.
காது கேட்கும் கருவி வாங்க வைத்திருந்த பணத்தை கேரள நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவன்...
x
புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜெய அம்பி. இவரின் மகன் ஜெய சூர்யா. அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். செவித்திறன் குறைபாடுள்ள ஜெயசூர்யா, புதிதாக காது கேட்கும் கருவி வாங்குவதற்காக 10 ஆயிரம் ரூபாய் பணத்தை சேர்த்து வைத்திருந்தார். இந்த நிலையில் கேரள நிவாரண நிதிக்காக அந்த பணத்தை, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியிடம் அவர் வழங்கினார்.  அந்த மாணவனுக்கு முதலமைச்சர் நாராயணசாமி பாராட்டு தெரிவித்துள்ளார் .Next Story

மேலும் செய்திகள்