கேரளாவுக்கு ரூ.700 கோடி நிவாரண நிதி வழங்கிய ஐக்கிய அரபு நாடு

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து கேரள மாநிலத்திற்கு 700 கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவித்ததற்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
கேரளாவுக்கு ரூ.700 கோடி நிவாரண நிதி வழங்கிய ஐக்கிய அரபு நாடு
x
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து கேரள மாநிலத்திற்கு 700 கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவித்ததற்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். மக்களின் துயரத்தை புரிந்து கொண்டு இந்த நிதியை வழங்கியதற்கும் அவர் நன்றி தெரிவித்தார். மேலும் மாநிலத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் புனரமைப்பு குறித்து விவாதிப்பதற்காக வரும் 30ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டுமாறு கேரள ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். 

களத்தில் இருந்து நேரடி தகவல்களை தரும் தந்தி டிவி

இயல்பு நிலைக்கு திரும்பும் கேரள மாநிலம் .முகாம்களில் இருந்து வீடுகளுக்கு திரும்பிய மக்கள் .கேரள மாநிலத்தில் பெய்த கனமழையால் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மேலும் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் சேறும் சகதியுமாக காணப்பட்டது. இந்த நிலையில், கேரள மாநிலத்தில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. கோளஞ்சேரி பகுதியில் உள்ள மக்கள் முகாம்களில் இருந்து திரும்பி தங்கள் வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாதிப்புக்கு உள்ளான வணிக வளாகங்களை சரி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்