வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: தற்போதைய சூழல் என்ன?

பம்பை நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முலாராணி, கோசஞ்சேரி, எடபவூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: தற்போதைய சூழல் என்ன?
x
பம்பை ஆற்றில் 2 கிலோமீட்டர் அகலத்துக்கு பாயும் வெள்ள நீர்
    பம்பை நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முலாராணி, கோசஞ்சேரி, எடபவூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மக்கள் வீடுகளின் கூரைகளில் ஏறி தஞ்சம் புகுந்துள்ளனர்.  ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மக்கள் உணவு மற்றும் மின்சாரம்  இன்றி தவித்து வருகின்றனர். பம்பை நதியில் சுமார் 2 கிலோமீட்டர் அகலத்துக்கு வெள்ளநீர் ஆர்ப்பரித்து பாய்ந்தோடுகிறது. 

வயநாடு - கன்னூர் சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு
    கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் உள்ள அம்பாய்தோடு என்னுமிடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் மலையின் ஒருபகுதி முற்றிலும் சரிந்து விழுந்து விளை நிலங்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மாவட்டத்தில் பாயும் அணைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கன்னூர், வயநாடு இடையே உள்ள நெடுஞ்சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீகண்டபுரம், சிவாபுரம், கேலகம் மற்றும் ஆறலம் ஆகிய பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 13 நிவாரண முகாம்களில் ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்