கேரளாவில் 123 பேரை மீட்ட கடலோரக் காவல் படை

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர், ஆலுவா மற்றும் பெரும்பாவூர் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியிருந்த குழந்தை உள்பட 123 பேரை இதுவரை கடலோரக் காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டுள்ளனர்.
கேரளாவில் 123 பேரை மீட்ட கடலோரக் காவல் படை
x
கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர், ஆலுவா மற்றும் பெரும்பாவூர் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியிருந்த குழந்தை உள்பட 123 பேரை இதுவரை கடலோரக் காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆலுவா மற்றும் பத்தனம்திட்டாவில் வெள்ளப்பெருக்கு
      பெரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஆலுவா நகருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. அங்குள்ள மக்களை பேரிடர் மீட்புகுழுவினர் மீட்டு முகாம்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

இதே போல் பத்தனம்திட்டா மாவட்டத்திலும் பம்பை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆரன்முலா, இராணி ஆகிய பம்பை நதி கரையோரங்களில் உள்ள வீடுகள் அனைத்தும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி முத்தூட் மருத்துவமனையின் முதல் தளமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மருத்துவமனையிலிருக்கும் 200 பேரை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை: மத்திய அரசு வழங்கிய கூடுதல் உதவிகள் 
      கேரள மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பி திறந்துவிடப்பட்டுள்ளன. தற்பொழுது தேசிய பேரிடர் மீட்புபடையை சேர்ந்த 
52 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில் மத்திய அரசு கூடுதலாக 40 குழு,க்களை அனுப்பியுள்ளது. 10 ஹெலிகாப்டர்கள், 200 லைஃப் படகுகள், லைஃப் ஜாக்கெட்டுகள் மற்றும் ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ படை வீரர்களுக்கான மீட்பு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்