"காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்துள்ளேன்" - ராகுல்

காங்கிரஸ் கட்சியையே தாம் திருமணம் செய்து கொண்டுள்ளதாக அதன் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்துள்ளேன் - ராகுல்
x
காங்கிரஸ் கட்சியையே தாம் திருமணம் செய்து கொண்டுள்ளதாக அதன் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல், அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார். 

பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், பாஜக ஆட்சியில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து விட்டதாக புகார் தெரிவித்தார். 

ஆனால், இது குறித்து பிரதமர் மோடி, ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் காத்து வருவதாகவும், அவர் குற்றஞ்சாட்டினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், திருமணம் குறித்த கேள்விக்கு காங்கிரஸ் கட்சியையே தாம் திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்