சாலை அமைக்கும் பணிகளில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள்

நக்சல் அச்சுறுத்தலால், ஒப்பந்தாரர்கள் வர மறுத்துவிட்ட நிலையில், சாலை அமைக்கும் பணிகளில் சி.ஆர்.பி.எஃப். படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சாலை அமைக்கும் பணிகளில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள்
x
நக்சலைட்டுகள் நடமாட்டம் மிகுந்த மாநிலங்களில், அடிப்படை வசதிகளை செய்து தருவது, பெரும் சவாலாகவே இருக்கிறது. குறிப்பாக, மலை வாழ் மக்களின் அடிப்படை தேவையான சாலை வசதிகளை செய்து தருவதில், சிக்கல் நீடிக்கிறது. சாலை வசதி செய்து தரும் வாகனங்களுக்கு தீ வைத்தல், ஒப்பந்ததாரரை கடத்திச் செல்வது, என்று நக்சல்கள் அத்துமீறி வருகின்றனர். ஒரு சில இடங்களில், சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் கொல்லப்படுவதும் உண்டு. இந்நிலையில், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் உதவியோடு, சாலை அமைக்கும் பணிகளை சி.ஆர்.பி.எஃப் வீர ர்கள் மேற்கொண்டு வருகின்றனர். Pradhan Mantri Gram Sadak Yojna திட்டத்தின் கீழ், சி.ஆர்.பி.எஃப். வீரர்களே, ஒப்பந்ததாரர்களாக நியமிக்கப்பட்டு, நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த சட்டீஸ்கரில், சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். முதன்முறையாக, பிஜப்பூர் மாவட்டத்தில், வெற்றிகரமாக 4.5 கி.மீ. சாலை அமைக்கும் பணிகளை முடித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்